பிரியங்கா கொல்லப்பட்ட அதே இடத்தில்!... 10 நாளில் அரங்கேறிய தண்டனை- அதிகாலை நடந்தது என்ன?

Report
622Shares

ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக்கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேரை இன்று அதிகாலை 3.30 மணிக்கும் பொலிசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்து கடந்த 27ம் திகதி ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் முகமது ஆரிப்(26), ஜொள்ளு சிவா(20), ஜொள்ளு நவீன்(20), சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு(20) என நான்கு குற்றவாளிகளை கைது செய்தனர்.

சைபராபாத் கமிஷ்னர் சஜ்னார் கொடுத்த உத்தரவின் பெயரில் தனிப்படை பொலிசார் நேற்று இரவு முழுவதும் குற்றவாளிகளிடம் தீவிரமாக விசாரணை செய்துள்ளனர். இதனையடுத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்று விளக்கமளிக்க கூறியுள்ளனர்.

குற்றவாளிகளுடன் 6 பொலிசார் சென்ற நிலையில், குற்றத்தினை விளக்கிய பின்பு 4 பேரும் புதருக்குள் குதித்து தப்பி ஓட முயற்சித்தும், இதில் ஒருவர் நெடுஞ்சாலையில் சென்று தப்பி ஓட முயற்சித்துள்ளனர். உடனே சுதாரித்துக்கொண்ட பொலிசார் நான்கு பேரையும் சுட்டு கொலை செய்தனர்.

இந்த என்கவுண்டரில் முக்கிய குற்றவாளி முகமது ஆரிப் கடைசியாக சுட்டுக் கொலை செய்யப்பட்டார். நான்கு பேரின் நெற்றியிலும், அடிவயிற்றுப் பகுதியிலும் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பொலிசார் ஒருவர் சிறிய காயம் ஏற்பட்ட நிலையில், குறித்த என்கவுண்டருக்கு உத்தரவு கொடுத்த கமிஷ்னர் சஜ்னார் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திலேயே 4 குற்றவாளிகளையும் கொலை செய்யப்பட்டுள்ளது தனது மகள் ஆத்மா சாந்தி அடைந்துவிடும் என்று கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை கண்ணீருடன் கூறியுள்ளதோடு, பொலிசாருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

loading...