கொடூரமாக கொல்லப்பட்ட பிரியங்கா!... குற்றவாளிகள் நால்வரும் என்கவுண்டரில் சுட்டுக் கொலை

Report
235Shares

தெலுங்கானாவில் பெண் கால்நடைமருத்துவரை எரித்து கொன்ற 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதை சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிகவும் கொடூரமாக உடல் கருகிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியதால், உடனடியாக பிரியங்கா ரெட்டியின் மரணத்திற்கு யார் காரணம்? என்பதில் பொலிசார் தீவிரம் காட்டினர்.

அதன்படி சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா என்ற ஆரீப், கேசவலு, சிவா, நவீன் என நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

விரைவாக விசாரித்து, கடுமையான தண்டனை வழங்கவும், வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைக்கவும் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் உத்தரவிட்டார்.

இந்நிலையில் குற்றவாளிகள் நால்வரையும் சம்பவம் நடந்த இடத்திற்கு, எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்துக் காட்ட பொலிசார் அழைத்து சென்றனர்.

இதன்போது பொலிசாரை தாக்கிவிட்டு நால்வரும் தப்ப முயன்றதால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.