கடந்த சில தினங்களாக நித்தியானந்தா மீது பல சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், அவர் சிறுமிகளை கடத்தி துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், தற்போது நித்தியானந்தா தலைமறைவாக இருக்கும் நிலையில், அவர் ஈகுவடார் நாட்டில் தனித்தீவு ஒன்று வாங்கியிருப்பதாகவும், அதை தனி நாடாக அறிவிக்கக்கோரி தான் ஐநாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், குறித்த நாட்டிற்கு கைலாசா என பெயரிட்டுள்ளதாகவும், அதுமட்டுமல்லாமல், அந்த தீவை இந்துக்களின் நாடாக அடையாளப்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தீவிற்கு செல்வதற்கு தனி பாஸ்போர்ட்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அந்த நாட்டுக்கு பிரதமராக தனக்கு நெருக்கமான நடிகையை நியமிக்க திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
அவருடன் நெருக்கமாக உள்ள, ‘அம்மா’ என சீடர்களால் அழைக்கப்படும், தமிழ் திரைப்பட நடிகைதான் கைலாசா நாட்டின் பிரதமர் என்கிறார்கள்.
மேலும் அகமதாபாத்தை சேர்ந்த 3 பெரும் தொழிலதிபர்கள் நித்யானந்தாவின் நாட்டை உருவாக்கும் பணிகளுக்கான செலவுகளை செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைரலாகும் அஸ்வினின் டுவிட்
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த தீவிற்கு செல்வதற்கு எப்படி விசா வாங்குவது என பதிவிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த பாடகர் ஸ்ரீனிவாஸ் உள்ளே செல்வது மிகவும் எளிது, ஆனால் வெளியில் வருவது கஷ்டம் என்று கமெண்ட் செய்துள்ளார்.
அதற்கு, அஸ்வின் இந்த நாட்டில் முதலீடு செய்யும் மக்களுக்கு ஏதேனும் பலன் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இவரது, பதிவிற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
What is the procedure to get visa?? Or is it on arrival? 🤷🏼♂️ #Kailaasa
— Ashwin Ravichandran (@ashwinravi99) December 4, 2019