25 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயம்.. அடித்துகொண்டு வெங்காயத்தை வாங்க சென்ற பொதுமக்கள்..!

Report
238Shares

தற்போது இந்தியா முழுவதுமே வெங்காய விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. பெரும்பலான பகுதிகளில் வெங்காயத்தின் விலை 100-யைத் தாண்டி தற்போது 200-ரூபாய் வரையில் ஒரு கிலோ வெங்காயம் விற்கப்படுகிறது.

இந்நிலையில் வெங்காய விலை உயர்வை பற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவை கூட்டத்தில் பேசியபோது, வெங்காயம் பற்றி கவலைப்படும் குடும்பத்தில் இருந்து நான் வரவில்லை., வெங்காயத்தை எங்கள் உணவில் நாங்கள் சேர்த்துக்கொள்வதில்லை; அதனால், வெங்காய விலை உயர்வு என்னையோ என்குடும்பத்தினரையோ பாதிக்கவில்லை என பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது ஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25 என விற்கப்பட்டுள்ளது. அதற்கு அங்கிருந்த பொதுமக்கள் அடித்துகொண்டு வாங்க முற்பட்டுள்ள காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

loading...