லொட்டரியால் அடித்த அதிர்ஷ்டம்... மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்த நபருக்கு அடித்த மற்றொரு அதிர்ஷ்டம்

Report
347Shares

கேரளா திருவனந்தபுரத்தில் பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர் ஒருவர் லொட்டரியில் பரிசு விழுந்த மகிழ்ச்சியில் இருந்தவருக்கும் மேலும் ஒரு புதையல் கிடைத்துள்ளது.

திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானூர் பகுதியை சேர்ந்தவர் ரெத்தினாகரன் பிள்ளை (60). வெள்ளனூர் பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலரான இவர் லொட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் கொண்டவர்.

கடந்த ஆண்டு அரசின் கிறிஸ்துமஸ் பம்பர் லொட்டரி குலுக்கலில் முதல் பரிசு ரூ.6 லட்சம் கிடைத்துள்ளது. இப்பணத்தில் ஒரு பழைய வீட்டினையும், சிறிது நிலத்தினையும் விலைக்கு வாங்கியுள்ளார்.

இந்நிலையில் தான் வாங்கிய நிலத்தில் விவசாயம் செய்வதற்கு திட்டமிட்டு, மண்ணைத் தோண்டும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது நிலத்திற்குள் மண் பானைகள் புதையல் இருந்துள்ளது.

அதில் 6 மண் பானைகளைக் கைப்பற்றிய ரெத்தினாகரன் பிள்ளை அதனை திறந்து பார்த்த போது, ஏராளமாக செப்பு நாணங்கள் இருந்துள்ளது.

குறித்த பானைகளில் 2 ஆயிரத்து 600 செப்பு நாணயங்கள் இருந்துள்ளது. புதையல் இருந்ததை அறிந்த மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்தனர். பின்பு பொலிசாருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விசாரணையில் நடத்தியுள்ளனர்.

திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் பாலராமவர்ம மகாராஜா காலத்து நாணயங்கள் அவை என்பது தெரியவந்தது. அந்த நாணயங்களை அரசிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

loading...