பசியால் மண்ணை அள்ளித்திண்ற குழந்தைகள்... தீயாய் பரவிய காணொளியால் தாய்க்கு கிடைத்த அதிர்ஷ்டம்

Report
499Shares

கேரளா திருவனந்தபுரத்தில் பசியால் குழந்தைகள், மண்ணை அள்ளி திண்ற சம்பவம் பெரும் அதர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இவரது கணவர் கூலி வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தினை குடித்தே அழித்து வந்துள்ளார். 6 குழந்தைகளைக் கொண்ட ஸ்ரீ தேவி வறுமையின் பிடியில் சிக்கித்தவித்துள்ளார்.

இந்நிலையில் அவரது குழந்தைகள் பசிக்கொடுமையினால் மண்ணைத் அள்ளித்தின்ற காட்சியை நபர் ஒருவர் காணொளியாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இக்காட்சியினை அவதானித்த, மாவட்ட நிர்வாகம் உடனடியாக அங்கு சென்று குழந்தைகளுக்கு தேவையான உணவுபொருட்களும் உதவிகளும் செய்துள்ளது.

மேலும் ஸ்ரீதேவிக்கு மாநகராட்சியில் வேலை ஒன்றும் வழக்கப்பட்டுள்ளது.

loading...