திருமணமான மறுநாளில் உயிரிழந்த மனைவி! இறுதிச்சடங்கு செய்த புதுமாப்பிள்ளை...

Report
224Shares

திருமணம் முடிந்த மறுநாள் தனது புகுந்த வீட்டிற்கு செல்ல தயாரான நிலையில் புதுப்பெண் மாரடைப்பு ஏற்பட்டு மரணித்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பாலசா மண்டலம் அருகேயுள்ள கருடகாண்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த, வரலட்சுமியின் மகள் தமயந்தி. இவருக்கும் கோபிநாத் சுரேஷ் என்ற இளைஞருக்கும் கடந்த வியாழக்கிழமை திருமணம் நடந்துள்ளது.

தாய் வீட்டில் அன்றைய தினம் சில சடங்குகளை முடித்துவிட்டு தனது மாமனார் வீட்டிற்கு புறப்பட தயாரான போது, புதுப்பெண் தமயந்தி சுருண்டு கீழே மயங்கி விழுந்துள்ளார்.

பதற்றமடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பரிசோதித்ததில் அவர் வழியிலேயே மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதை கேட்டு அதிர்ந்த புது மாப்பிளை உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் மருத்துவமனையிலேயே கதறி அழுதுள்ளனர். பின்னர் தமயந்தியின் உடலுக்கு மாப்பிளை வீட்டார் இறுதி சடங்கு செய்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.