குடிபோதையில் லொறியை தாறுமாறாக இயக்கிய டிரைவர்.. பரிதாபமாக பலியான உயிர்கள்..! நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

Report
122Shares

கிருஷ்ணகிரியில் சுங்கச்சாவடியில் லொறி ஒன்று தாறுமாறாக வந்து மோதிய நிலையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற மினி லாரி ஒன்று அதிவேகமாக வந்துகொண்டிருந்த நிலையில், கிருஷ்ணகிரி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்யும் மையம் ஒன்றின் மீது மோதியது. இதில் கட்டண வசூல் மையம் 50 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.

குறித்த கோர விபத்தில், சுகுமார் என்பவரின் மனைவி பிரமிளா மற்றும் முன்னாள் இராணுவ வீரரான சென்னப்பன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் சுங்கச்சாவடியில் பணியில் இருந்த கவிதா என்ற இளம்பெண் படுகாயமடைந்தார். அந்த விபத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரந்து வந்த பொலிசார், படுகாயமடைந்த கவிதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் சிவக்குமார் என்பவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சம்பவம் நடந்த போது அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

மேலும், சிசிடிவியில் பதிவாகியிருந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

loading...