நடுரோட்டில் பைக்கை சுக்குநூறாக உடைத்த இளைஞர்... பின்பு அமர்ந்து அழுத சோகம்! காரணம் என்ன தெரியுமா?

Report
183Shares

இந்தியாவில் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் தனது இருசக்கர வாகனத்தினை உடைத்துவிட்டு அழுத சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சாலை விபத்துக்களின் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை இந்தியாவிலும் அதிகமாக நிகழ்வதால் தற்போது போக்குவரத்து சட்டம் கடுமையாக இருந்து வருகின்றது.

இதனால் அபராத தொகையினை அதிகரித்ததை கண்டித்து நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தினை தீ வைத்து கொளுத்திய நிகழ்வும் அரங்கேறியது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் இளைஞர் ஒருவருக்கு போக்குவரத்து பொலிசார் ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக அபராதம் விதித்துள்ளனர்.

பொலிசாரின் இந்த செயலினால் விரக்தியடைந்த குறித்த இளைஞர், தனது பைக்கினை உடைக்கத் தொடங்கியதோடு, சில வினாடிகளுக்கு பின்பு தனது பைக்கின் மீது அமர்ந்து அழத் தொடங்கியுள்ளார்.

குறித்த நிகழ்வினை அவதானித்த நெட்டிசன்கள் ஹெல்மெட் போடாதது தவறு என்றும் அபராத தொகையினை அதிகரித்தது தவறு என்றும் கூறி வருகின்றனர்.

7178 total views