வைரமுத்துவை திட்ட கெட்ட வார்த்தைகளை இளம் பெண்ணுக்கு சொல்லி கொடுத்த நித்யானந்தா! மீண்டுவந்த பெண் பரபரப்பு தகவல்

Report
72Shares

வைரமுத்துவை திட்ட எனக்கு கெட்ட கெட்ட வார்த்தைகளை சொல்லி கொடுத்தது நித்யானந்தாதான் என்று ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

ஒரு பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அந்த பெண் முகத்தை துணியால் மறைத்தபடி பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

ஆண்டாள் விவகாரம் எழுந்தபோது வைரமுத்துவை திட்டி காணொளி வெளியிட்ட பெண் இவர்தான். பலரும் இந்த சிறுமியின் பேச்சை கண்டு அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.

எனினும், ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மன்னிப்பு கேட்டிருந்தார்.

ஆண்டாள் விவகாரம் எழுந்தபோது, கவிஞர் வைரமுத்துவை திட்ட சொல்லி கொடுத்ததே நித்யானந்தாதான். அதுவும் கெட்ட வார்த்தைகளை சொல்லி தந்ததே நித்யானந்தாதான் என்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இதேவேளை, பெங்களூரை சேர்ந்தவர் ஜனார்த்தனா ஷர்மா. இவர் கடந்த 2013-ல் பெங்களூரிலுள்ள நித்தியானந்தாவுக்குச் சொந்தமான பெங்களூரு கல்வி நிறுவனத்தில் 7 முதல் 15 வயதுடைய 3 மகள்களை கொண்டுபோய் சேர்த்துள்ளார்.

அதில் 2 பேர் மட்டும் அஹமதாபாத் ஆசிரமத்துக்கு இடமாற்றப்பட்டனர்.

இது அறிந்த ஷர்மா, போலீசார் உதவியுடன் ஒரு மகளை மீட்டுவிட்டார். ஆனால், இன்னும் 2 மகள்கள் நித்யானந்தா ஆசிரமத்தில் அடைந்து வைத்துள்ளதாகவும், மூத்த மகள்கள் லோகமுத்ரா, நந்திதாவை மீட்டு தர வேண்டும் என்றும் சொல்லி பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இது குறித்த விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் இவ்வாறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.