48 மணி நேரம் தொடர்ந்து படபிடிப்பு.. மாரடைப்பால் உயிருக்கு போராடும் இளம்நடிகை..!

Report
205Shares

தொடர்ந்து 48 மணி நேரம் படபிடிப்பில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த இளம்நடிகைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகை கெஹனா வசிஸ்த்(31).

இவர் தமிழில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பேய்கள் ஜாக்கிரதை என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

இந்நிலையில், தற்போது வெப் சிரியஸ் ஒன்றில் நடித்து வரும் கெஹனா வசிஸ்த் சரியாக சாப்பிடாமல், தொடர்ந்து 48 மணி நேரம் நடித்துக் கொண்டிருந்த காரணத்தால், அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, உடனடியாக கெஹனா மும்பையில் உள்ள ரக்‌ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து, கெஹனாவை சோதித்து பார்த்த மருத்துவர்கள் கெஹனாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

மருத்துவர்கள் மேலும் கூறியதாவது, கெஹனாவுக்கு சர்க்கரை நோய் உள்ளது. அவரின் ஷுகர் அளவு அதிகமாக உள்ளது. மேலும் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துள்ளது.

அவர் சர்க்கரை நோய் மற்றும் சில பிரச்சனைகளுக்கு மருந்து சாப்பிட்டு சில எனர்ஜி டிரிங்ஸ் குடித்துள்ளார். அவருக்கு மூச்சுவிடும் பிரச்சனை உள்ளது. அதனால் சுவாசக் குழாய் பொருத்தப்பட்டுள்ளது என்றார்.

7704 total views