பள்ளிக்கு தயாரான மாணவி.. ஷூவில் இருந்து தலைகாட்டிய நாகப்பாம்பு..! பகீர் வீடியோ

Report
224Shares

திருவனந்தபுரம் பகுதியில் பள்ளி மாணவியின் ஷூவிற்கும் நாகப்பாம்பு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் கரிக்ககொம் கோவில் பகுதியைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு பயிலும் மாணவி பள்ளிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

அப்பொழுது, அவரது ஷூவை அவரது தாயார் எடுத்து மாணவிக்கு அணிவிக்க சென்ற போது குட்டி நாகப்பாம்பு ஒன்று ஷூவிற்குள் இருந்து தலையை நீட்டியுள்ளது.

இதைப்பார்த்து, தாயாரும், மாணவியும் அதிர்ச்சியில் உறந்த நிலையில், சட்டென சுதாரித்த தாய், ஒரு பாத்திரத்தை எடுத்து ஷூவை மூடி வைத்துள்ளார்.

இதையடுத்து, கேரளாவில் பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த சுரேஷ் அந்த பாத்திரத்தை எடுத்துவிட்டு ஷூவில் இருந்து சீறி வந்த குட்டி நாகத்தை லாவகமாக பிடித்து டைல்ஸ் தளத்தில் விட்டார்.

ஆனால் பாம்பால் ஊர்ந்து செல்ல முடியாமல் தவித்ததையடுத்து அந்தப் நாக பாம்பை பிடித்துச் சென்றார் சுரேஷ்.

மழைக்காலத்தில் மாணவர்கள் தங்களது ஷூக்களை அணிவதற்கு முன்னதாக, உள்ளே எதுவும் பூச்சிகள் உட்புகுந்திருக்கிறதா என்பதை பார்த்து அணிய வேண்டும். பெற்றோர்கள் இதில் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் என வாவா சுரேஷ் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

7723 total views