பள்ளியில் அழுதுபுரண்ட தலைமை ஆசிரியை... மிரண்டு ஓடிய மாணவர்..!

Report
264Shares

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் அய்யம்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருபவர் இந்திரா.

இந்நிலையில், தான் தலைமை ஆசிரியராக பணிபுரியும் பள்ளியில் இரண்டு மாணவர்கள் மட்டுமே பயின்று வந்ததாகவும், தற்போது அவர்களும் சரியாக பள்ளிக்கு வருவதில்லை என்றும் கூறி பணியிட மாறுதல் கேட்டு கவுன்சிலிங் வந்தவர்களிடம் மனு கொடுத்துள்ளார் தலைமை ஆசிரியை இந்திரா.

ஆனால், பணியிட மாறுதலுக்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால், சிறுபிள்ளை போன்று, அவர்கள் முன்பாகவே தரையில் புரண்டு அழுதுள்ளார்.

இதற்கிடையே தலைமை ஆசிரியை இந்திராவை அநாகரீகமாக நடந்து கொண்டதாக பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இதையடுத்து மகளிர் போலீசார் வரவழைக்கப்பட்டு இந்திராவை வேனில் ஏற்றி அழைத்துச்சென்று அப்புறப்படுத்தினர்.

இது ஒருபுறமிருக்க, செய்தியாளர் ஒருவர் தனியார் பள்ளியில் பயிலும் 2 ஆம் வகுப்பு மாணவனிடம் Tell about yourself என கேள்வி கேட்க, குறித்த சிறுவன் சரசரவென ஆங்கிலத்தில் பதிலளித்தான். ஆனால் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவரிடம் அதே கேள்வியை கேட்ட நிலையில், குறித்த மாணவர் ஆங்கிலத்தில் எல்லாம் கேள்வி கேட்காதீர்கள் என அந்த இடத்தைவிட்டு ஓடிய சம்பவம் அரசு பள்ளியின் நிலை குறித்து அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.

loading...