உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தந்தை... மகள் செய்த நெகிழ வைக்கும் செயல்..! பாராட்டு மழை பொழிந்த முதல்வர்

Report
221Shares

புதுச்சேரியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தந்தைக்கு மகள் தனது கல்லீரலில் பாதியை தானமாக கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

புதுச்சேரியை சேர்ந்தவர் முருகன். 48 வயதாகும் இவருக்கு கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் உடனடியாக கல்லீரலை மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மேலும், மாற்று அறுவை சிகிச்சை மூலம் கல்லீரலை மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து பெறுவதற்காக காத்திருந்தனர்.

ஆனால், அப்படி எதும் கல்லீரல் கிடைக்காத காரணத்தால், தந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்ட முருகனின் மகள் நிவேதா (19) சட்டென்று முடிவு ஒன்றை எடுத்தார்.

அதன்படி, மருத்துவர்களிடம் சென்று என்னுடைய கல்லீரலை தனது தந்தைக்கு பொருத்த முடியுமா என கேட்க, அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள், சம்மதம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, லேப் ராஸ் கோப்பி சிகிச்சை முறை மூலம் மகளின் ஒரு பகுதி கல்லீரலை பிரித்தெடுத்து முருகனுக்கு வெற்றிகரமாக பொறுத்தப்பட்டது.

தற்போது இருவரும் நலமாக உள்ளனர். இந்த சிகிச்சை சென்னையில் முதல்முறையாக ஜெம் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.22 லட்சம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தந்தையின் மீதான பாசத்தில் மகளே தனது கல்லீரல் கொடுத்து தந்தையை காப்பாற்றியுள்ள சம்பவத்தை அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவேதாவை அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

loading...