அழகு நிலையம் நடத்தி வந்த அக்கா மகள்... மாமா செய்த கொடூர செயல்..!

Report
449Shares

பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரர் ஒருவர் தன்னுடைய சகோதரி மகளை சுட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், மொஹல்லா மாவட்டத்தில் சொந்தமாக அழகு நிலையம் நடத்தி வந்தவர் ருபிந்தர் கவுர்.

இந்நிலையில், கடந்த 17 ஆம் திகதி அழகு நிலையத்தில் 2 முறை துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டுள்ளது.

உடனடியாக, அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த ருபிந்தரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, மேலும் ஒருவர் இறந்து கிடந்ததால் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

பின்னர், சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.

அதில், துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர் பெயர் சிங். இவர் ஒரு ராணுவ அதிகாரி ஆவார்.

இவருடைய சகோதரியின் மகள் தான் ரூபிந்தர். ‌அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.

17-ஆம் தேதியன்று சிங் அழகு நிலையத்திற்கு வந்து ருபிந்திரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தான் தன்னுடைய துப்பாக்கியினால் ரூபிந்தரை சுட்டு கொன்றுள்ளார்.

அதன் பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

loading...