திருமணமான 5 நாளில் புதுப்பெண் செய்த காரியம்... மாடிக்கு சென்ற மாமியார் கண்ட பேரதிர்ச்சி!

Report
682Shares

தமிழகத்தில் திருமணமான 5 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான தமிழகத்தில் தேனி மாவட்டத்தினைச் சேர்ந்தவர் சேதுபதி(22). இவருக்கும் சிவசக்தி(18) என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்கு பின்பு சேதுபதி மனைவியுடன் வீட்டின் மாடியிலும், சேதுபதியின் பெற்றோர் கீழ் வீட்டிலும் வசித்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று மாலை சேதுபதி வெளியே சென்ற நிலையில் வெகு நேரமாகியும் சிவசக்தி கீழே வராததால், சந்தேகமடைந்த மாமியார் புஷ்பவள்ளி மாடிக்கு சென்று அவதானித்துள்ளார்.

அங்கு மின்விசிறி மாட்டுவதற்கு பொருத்தப்பட்டிருந்த கொக்கி ஒன்றில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

பின்பு கதறியழுது கீழே வந்த புஷ்பவள்ளியின் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அனைவரும் வந்து தூக்கில் தொங்கிய சிவசக்தியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்து பொலிசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் சிவசக்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது மட்டும் தெரியவந்துள்ளது ஆனால் அதற்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

loading...