குழந்தையை தூக்கி கொஞ்சும் தாய்... பசுவின் உடலில் உருவான அதிசய உருவம்!

Report
341Shares

இந்திய மாநிலமான கர்நாடகாவின் சிக்கோடியில் இங்களி கிராமத்தைச் சேர்ந்த ராகுல் ஜாதவ் என்ற விவசாயியின் பசுமாட்டின் வயிற்றுப்பகுதியில் இருக்கும் தோலில் தாய் குழந்தை ஒன்றினை அணைத்துக்கொண்டிருப்பது போன்று காணப்படுவது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரணமாகவே கருப்பு, வெள்ளை நிறமுள்ள பசுவின் உடலில் பல்வேறு வகையான உருவங்கள் காணப்படுவது இயற்கை என்றாலும் குறித்த உருவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் மகாராஷ்டிரா மாநிலத்தில் கால்நடை சந்தையிலிருந்து இந்த ஜெர்ஸி பசுவை வாங்கி வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக குறித்த பசுவின் வயிற்றின் மீது கருப்பு நிறத்தில் வடிவம் ஒன்று காணப்படத்தொடங்கியுள்ளது.

இதனை சாதாரணமாக எடுத்துக்கொண்ட விவசாயி குறித்த வடிவம் முழுமைப் பெற்ற பின்பு அதனைக் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளார்.

தற்போது குறித்த உருவம் முழுமை பெற்று பெண் ஒருவர் உட்கார்ந்த நிலையில் குழந்தையை தூக்கி கொஞ்சுவது போன்று தெளிவாக காணப்படுகிறதைப் படத்தில் காணலாம்.


loading...