ஆர்டர் செய்த உணவைக் குறித்து புகாரளிக்க முயன்ற நபர்... ரூ.4 லட்சத்தினை பறிகொடுத்த பரிதாபம்!

Report
132Shares

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துவிட்டு, அந்த உணவினைப் பற்றி புகார் அளிக்கச் சென்ற வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.4 லட்சம் திருடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவைச் சேர்ந்த அமன் என்பவர் உணவு விநியோக வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகியைத் தொடர்ந்து கொண்டு புகார் அளித்துள்ளார். அவர் புகார் அளித்த சில நொடிகளில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

குறித்த நபர் தான் புகார் அளிப்பதற்கு உணவு டெலிவரி ஆப்- ன் தொடர்பு எண்ணைத் வலைத்தளத்தில் தேடி எடுத்துள்ளார் என்பதும் அந்த எண் போலியான எண் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

மொபைல் எண்ணில் தன்னை நிர்வாகி என்று அறிமுகப்படுத்திய நபர், உங்களது உணவிற்கான பணத்தினை திரும்ப செலுத்திவிடுகிறோம் என்றும் ஒரு பயன்பாட்டு செயலியைப் பதிவிறக்கம் செய்து உங்களது வங்கிக்கணக்கின் விபரங்களை பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமன் தனது வங்கிக்கணக்கின் விபரங்களை பதிவு செய்த உடன், அவரது மொபைலுக்கு ஒரு OTP எண் வந்துள்ளது. அந்த நம்பரை உணவு விநியோக பயன்பாட்டு அதிகாரிபோல் பேசியவர் கேட்டதும் கூறியுள்ளார். அமன் கூறிய சில நொடிகளில் அவரது வங்கிக்கணக்கிலிருந்து ரூ.4 லட்சம் திருடப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது. எப்படியெல்லாம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதற்கும் இனி எவ்வளவு சூதானமாக இருக்க வேண்டும் என்பதற்கும் குறித்த நிகழ்வு எடுத்துக்காட்டாகும்.

loading...