ஒரே பிரசவத்தில் பிறந்த 4 சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Report
246Shares

கேரளாவில் கடந்த 1995ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி பிரேம்குமார்- ரமாதேவி தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தது.

அதில் 4 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை பிறந்தது.

அனைவரும் ஒரே ராசியில் உத்ர நட்சத்திரத்தில் பிறந்ததால் தனது குழந்தைகளுகு்கு உத்ரஜா, உத்தாரா, உத்தமா, உத்ரா மற்றும் ஆண் குழந்தைக்கு உத்ராஜன் எனப் பெயர் வைத்தார். மேலும் தனது வீட்டின் பெயரையும் பஞ்ச ரத்னம் என மாற்றினார்.

இவர்கள் 4 பேரும் ஒரே மாதிரி வளர்க்கப்பட்டனர். இந்நிலையில் இந்த குழந்தைகளுக்கு 9 வயதாக இருக்கும்போது ப்ரேம் குமாருக்கு ஏற்பட்ட தொழில் நஷ்டத்தால் தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின் தன் கடும் உழைப்பால் தனது 5 குழந்தைகளையும் பூமாதேவி வளர்த்தார். தற்போது உத்ரா பேஷன் டிசைனராகவும், உத்தரஜா, உத்தம்மா ஆகியோர் மயக்கவியல் மருத்துவராகவும், உத்தாரா பத்திரிக்கையாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் 4 பேருக்குத் திருமணம் செய்ய வைக்க மாப்பிள்ளை பார்க்கப்பட்ட நிலையல் தற்போது 4 பேருக்கும் தகுந்த மாப்பிள்ளைகள் கிடைத்துவிட்ட நிலையில் இவர்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அதற்கான ஏற்பாடுகளை இந்த நான்குபேருடன் உடன் பிறந்த உத்ராஜன் செய்து வருகிறார். ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பேருக்கு ஒரே நேரத்தில் ஒரே மணமேடையில் திருமணம் நடக்கவுள்ள சம்பவம் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

8387 total views