வசதியாக வாழ்ந்த தம்பதி... இறுதியில் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய அவலம்..!

Report
249Shares

கடன் பிரச்சினை தொல்லையால் கடிதம் எழுதிவிட்டு கணவன், மனைவி இருவரும் நைலான் கயிற்றால் ஒன்றாக தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓட்டேரி பகுதியில் வசித்து வந்தவர் சந்திரன், விஜயலட்சுமி தம்பதி. இவர்களுக்கு அரிபிரசாத் என்ற மகனும், ராதிகா என்ற மகளும் உள்ளனர்.

இரு பிள்ளைகளுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. அதனால் சந்திரனும், விஜயலட்சுமியும் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், வீட்டு வேலை செய்யும் சித்ரா வழக்கம்போல் வீட்டு வேலை செய்ய வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் திறந்த நிலையில் கிடப்பதை கண்டதும், உள்ளே சென்று பார்த்த போது, தம்பதி இருவருமே நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தொங்கியதை கண்டு அலறியுள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் உடலை கைப்பற்றி விசாரனை தொடங்கினர்கள்.

அப்போது, கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், "நான் நிறைய கடன் வாங்கி விட்டேன். வாங்கிய கடனுக்கு வட்டியாக மட்டும் மாசத்துக்கு ஒரு லட்சத்துக்கு மேல தந்து வந்தேன். இனியும் என்னால், வட்டியும், அசலையும் தர முடியாத விரக்தியால்தான் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம்.

ஆனால், எங்களுக்கு கடன் கொடுத்தவர்கள், எங்கள் மகன், மகளிடம் பணம் கேட்டு தொல்லை தர வேண்டாம்" என உருக்கமாக கேட்டுக் கொண்டிருந்தார்.

சந்திரன், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர். ஒரு காலத்தில் வசதியாக வாழ்ந்து, அதற்கு பிறகுதான் அவருக்கு திடீரென கடன் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். கடன் அதிகமாக இருந்ததால்தான், தன்னுடைய சொந்த வீட்டைகூட கடன்காரர்களிடம் தந்துவிட்டாராம். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

loading...