லலிதா ஜுவல்லரி கொள்ளையனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த உரிமையாளர்... என்ன காரணம் தெரியுமா?

Report
1534Shares

தற்போது திருட்டு என்பது மிகவும் நூதன முறையில் அசால்ட்டாக அரங்கேறி வருகின்றது. அவ்வாறு இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் தான் திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம்.

லலிதா ஜுவல்லரி கொள்ளையில் மூளையாக செயல்பட்டவர் திருவாரூர் முருகன். இவரது மருமகனான சுரேஷ் என்பவரும் இவருக்கு உடந்தையாக இருந்துள்ளார்.

தற்போது வரை 22¾ கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தலைமறவாகியிருந்த கும்பலின் தலைவன் முருகன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மேலும் இவருக்கு நடிகைகளுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது குற்றவாளி முருகனிடம் நகைக்கடை உரிமையாளர் பேசியது தீயாய் பரவி வருகின்றது.

பொலிஸ் விசாரணையில் இருக்கும் முருகனிடம் தான் தனியாக பேச அனுமதி தர வேண்டும் என்று நகைக்கடை உரிமையாளர் கிரண் குமார் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அதற்கு சம்மதிக்காத அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் சட்டத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 15 நிமிடம் மட்டும் பேச அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.

அவர் முருகனிடம் பேசியதாவது, பல இடங்களில் கிளைகள் வைத்திருக்கும் தருணத்தில் திருச்சியில் மட்டும் இவ்வாறு சுவற்றில் துளையிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு முருகன் கூறுகையில் நானும், என் மனைவியும் 10 தடவைக்கு மேல் நகை வாங்குவதற்கு உங்களது கடைக்கு வந்துள்ளோம்.

எனது மனைவி நகை எடுத்துக்கொண்டிருக்கும் தருணத்தில் நான் கடை மொத்தமாக நோட்டமிட்டு எவ்வாறு சுலபமாக உள்ளே நுழைவது என்று திட்டமிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு உரிமையாளர், சரி எனது குழப்பம் தீர்ந்தது நன்றி என்று கூறிவிட்டு சென்றுள்ளார். குற்றவாளி எதற்காக நன்றி தெரிவித்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதலளித்த உரிமையாளர், எனக்கு நகை சென்றது எந்த கவலையும் இல்லை. நான் இன்சுரன்ஸ் செய்துவைத்தது மட்டுமின்றி எனக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகமாக இருப்பதால் இதற்கு மேலும் என்னால் சம்பாதிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

என்னிடம் வேலை செய்யும் ஊழியர்களின் துணையுடன் நீ திருட வந்தாயா? அவ்வாறு வேலை செய்பவர்களின் தேவையினை நான் எதுவும் பூர்த்தி செய்யாமல் விட்டு தவறு செய்துவிட்டேனா? என்ற கேள்வி என்னை குழப்பிக்கொண்டிருந்தது. அதனை உடனே சரிசெய்ய வேண்டும் என்று தான் உன்னிடம் வந்தேன். தற்போது அந்த குழப்பம் தீர்ந்துவிட்டது என்று கூறியதை அவதானித்த காவல் அதிகாரி “ராயல் சல்யூட் சார்” என்று கூறியுள்ளார்.

கோடி கோடியாய் சம்பாதிக்கும் முதலாளிகள் தொழிலாளர்களின் நலனை அவ்வளவாக கருத்தில் கொள்ளாத இந்தக் காலத்தில், தொழிலாளியின் மனநிறைவும், உழைப்பும் தான் காரணம் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளதற்கு என்பதை வெளிப்படுத்தியதோடு, தொழிலாளிகளை நல்ல முறையில் வைத்திருப்பது முதலாளிகளின் கடமை என்பதை செயல் மூலம் தெரியவைத்துள்ள லலிதா ஜுவல்லரி நகை உரிமையாளரை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

loading...