மகனின் பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்க சென்ற தாய்... குட்டையில் பிணமாக மிதந்த கொடுமை!

Report
375Shares

மகன் பிறந்தநாளிற்கு புத்தாடை எடுக்க சென்ற பெண் குட்டையில் பிணமான மிதந்து வந்தது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த தம்பதி செந்தில் - ஷோபனா(29). ஷோபனா பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வருகின்றார். இவர்களுக்கு தேவா(11), சச்சின்(4) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மகன் தேவாவிற்கு பிறந்தநாள் வருவதால் புத்தாடை வாங்குவதற்கு கடைக்குச் சென்றுள்ளார். இரவு 9 மணியளவில் வீட்டிற்கு போன் செய்த ஷோபனா கடைசி பேருந்தினை விட்டுவிட்டேன். நண்பருடன் காரில் வீட்டிற்கு வந்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார். நள்ளிரவாகியும் மனைவி வீடு திரும்பாததால் கணவர் செந்தில் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து ஷோபனாவை பொலிசார் தேடி வந்த நிலையில், அவரது சடலம் புள்ளியம்பாளையம் ரோட்டோரம் கிடந்த ஒரு குட்டையில் கண்டெடுக்கப்பட்டது. அருகே இருந்த தோட்டத்தில் மகனுக்கு வாங்கிய புத்தாடை, சாக்லெட் இவைகள் சிதறி கிடந்துள்ளன.

ஆனால் ஷோபனாவின் கழுத்தில் இருந்த நகைகள் அப்படியே இருந்துள்ளதால் இக்கொலை நகைக்காக நடக்கவில்லை என்று உறுதி செய்த பொலிசார், பாலியல் பலாத்காரமாக இருக்கலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.

இதையடுத்து ஷோபனாவின் செல்போனை ஆராய்ந்த போது, ஷோபனாவின் கள்ள உறவு தெரியவந்துள்ளது. கடைசியாக திருச்செங்கோட்டைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞருடன் பேசியதால் பொலிசார் அவரைப் பிடித்து விசாரித்துள்ளனர்.

பின்பு தான் இவர்களுக்குள் இருந்த தகாத உறவு தெரியவந்துள்ளது. ஆனால் எதற்காக இந்த கொலை அரங்கேறியது என்ற காரணம் இன்னும் வெளியாகவில்லை.


loading...