கல்கி ஆச்சிரமத்தில் மாயமான சாமியார் எங்கு இருக்கின்றார் தெரியுமா? மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய காட்சி

Report
786Shares

கல்கி ஆச்சிரமத்தில் மாயமான பகவான் காணொளி ஒன்றை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

"நான் ஓடிபோகவில்லை.. ஒளியவும் இல்லை..இங்கதான் இருக்கேன்.. நல்லா இருக்கேன்" என்று கல்கி ஆசிரம சாமியார் தெரிவித்துள்ளார்.

30 வருஷத்துக்கு முன்னாடி, ஆந்திர மாநிலம் நெகமத்தில் கல்கி பகவான் என்ற கல்வி ஆசிரமத்தை நிறுவிய விஜயகுமார், விஷ்ணுவின் அவதாரம் என்று தன்னை அறிவித்து கொண்டார்.

ஆனால், இந்த ஆசிரமம் தொடர்பாக செக்ஸ் புகார்கள், போதை பொருட்கள் புழக்கம் என்ற தவரான கருத்துக்கள் வெளியே வந்து, கோர்ட், கேஸ்வரை போனது.

சில வருடங்களாகவே சாமியார் மகன் கிருஷ்ணாவின் பிடிக்குள் ஆசிரம பொறுப்பு சென்றது.

இதையடுத்துதான் போன வாரம் ஆசிரமத்தில் திடீர் ரெய்டு வந்துவிட்டது.. 40 கல்கி ஆசிரமங்களிலும் 400 அதிகாரிகள் சோதனை நடத்தி 500 கோடியை கைப்பற்றி, அது சம்பந்தமான வீடியோவையும் வெளியிட்டனர்.

இதில், ஆவணங்களில் கையெழுத்தும் போடலையாம். சாமியாரை விசாரிக்கலாம் என்றால் அவர் அங்கு இல்லையாம். எனினும் பகவான் இங்கதான் இருக்கிறாரா, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டாரா என்ற சந்தேகங்கள் பக்தர்கள் மத்தியிலேயே எழ ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் சாமியார் திடீரென ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். சாமியார், ஒரு சோபாவில் அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் பேசுகிறார்.

அதில், "நாங்க நாட்டை விட்டு ஓடிவிடவில்லை. வேறு எங்கேயும் போகவும் இல்லை.. இங்கேதான் இருக்கிறோம் என்று கூறியுள்ளார். எனினும், 500 கோடி பற்றி இது வரை எந்த பதிலும் கூற வில்லை.