ஒரு ஆணுக்காக போட்டி போட்டு கொண்டு விரதம் இருந்த மூன்று மனைவிகள்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Report
213Shares

இந்தியாவின் வட மாநிலங்களில் வருடா வருடம் 'கர்வா சவுத்' எனப்படும் பண்டிகை கொண்டாடப்படும்.

இந்த பண்டிகையின் போது, பெண்கள் தங்களது கணவனின் நல்வாழ்விற்காக நாள் முழுக்க விரதம் இருப்பார்கள்.

விரதம் முடியும் போது தங்களது கையில் உள்ள சல்லடை வழியாக நிலவைக் கண்டவுடன்தான் தங்களது விரதத்தை முடித்துக் கொள்வர்.

அப்படி பண்டிகையின் போது எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

மத்திய பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் மூன்று பெண்கள் சல்லடை வழியாக தங்களது ஒரே கணவரைக் காணும் புகைப்படம் அது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.