அண்ணனுடன் காதல்.. மகளை கண்டித்த தாய்க்கு நேர்ந்த கொடூர சம்பவம்..!

Report
938Shares

தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்ணன் முறை உள்ள பையனை மகள் காதலித்ததால் எதிர்ப்பு தெரிவித்த தாயை மகளே கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் விளாங்குடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவரை இழந்த நிலையில், அப்பகுதியில் துப்புரவு பணியாளராக பணி புரிந்து வருகிறார்.

இவருடைய மகள் ரூபினி( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது உறவுக்கார இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மகள் காதலிக்கும் அந்த இளைஞர் ஒரு வகையில் மகளுக்கு அண்ணன் முறை வரும் என்பதால், தாய் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து படிப்பில் கவனம் செலுத்துமாறு கண்டித்துள்ளார்.

ஆனால், தாயின் பேச்சை கேட்காத மகள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகள் காதலனுடன் ஓடிப்போனார்.

இதனால், மகளை கடத்திவிட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார் தாய். பின்னர் இருவரும் வீடு திரும்பினர்.

மேலும் தன்மீதான புகாரை வாபஸ் வாங்குமாறு காதலியின் தாயிடம் காதலன் கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, தாய் இருந்தால் தன் காதலனை அடைய முடியாது என்று நினைத்து தாயை இரும்பு கம்பியால் சரமாறியாக தாக்கியுள்ளார்.

இதனால், தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். தகவல் அறிந்த வந்த திருவையாறு போலீஸ் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மகளை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

loading...