லலிதா ஜீவல்லரி கொள்ளையனால் மீண்டும் பதறியடித்து விஜபிகளிடம் ஓடும் நடிகைகள்.. பரபரப்பு தகவல்..!

Report
741Shares

திருச்சி லலிதா ஜீவல்லரி கடையில் கொள்ளையடித்த சம்பவம் சமீப நாட்களாக பல பரபரப்பு தகவல்கள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அப்படி அதில் ஒரு சம்பவம் தான் கொள்ளையன் முருகன் தெலுங்கு, தமிழ் நடிகைகளுடன் ஜாலியாக இருந்தது.

இதைத்தொடர்ந்து,நடிகைகளுடன் ஜாலியாக இருந்தோம்" என்று சுரேஷ் சொன்ன வாக்குமூலம் திரையுலகையே புரட்டி போட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட தெலுங்கு, தமிழ் நடிகைகள் பதறியடித்து கொண்டு விஜபிக்களுக்கு போனை போட்டு காப்பாற்ற சொல்லி நச்சரிக்க தொடங்கியுள்ளார்களாம்.

தற்போது லலிதா ஜுவல்லரி கொள்ளையில் முக்கிய குற்றவாளிகள் முருகன், சுரேஷ், கணேசனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இதில் எப்படி கொள்ளைகளை அடித்தோம் என்று விலாவாரியாக கணேசன் சொல்லி கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம் மாமா முருகனின் எல்லா ரகசியங்களையும் புட்டு புட்டு வைத்து வருகிறார் சுரேஷ். அதில் ஒரு விஷயம்தான், நடிகைகளுடனான தொடர்பு என்பது.

கொள்ளை அடித்த பணத்தை கொண்டு சினிமா எடுத்தோம். ஒரு படத்துக்கு ஹீரோயினாக புக் செய்ய ஒரு பிரபல தமிழ் நடிகையை சந்தித்தோம்.. டேட் இல்லை என்று சொல்லிவிட்டார்.. நாங்கள் நகை கடை வைத்திருக்கிறோம் என்றோம்.. உடனே நெருங்கி பேச ஆரம்பித்துவிட்டார். கொள்ளையடித்த ஒரு நகையை அவருக்கு தந்தோம்.. விஜய், சிவகார்த்திகேயனுடன் நடித்த அவர் ஒரு வாரிசு நடிகை. அதேபோல, தமிழ், தெலுங்கு நடிகைகளிடம் உல்லாசமாக இருந்தோம். பணம், நகைகளை அவர்களிடம் நாங்கள் கொட்டினோம்" என்று வாக்குமூலமாக சொல்லி உள்ளான்.

இந்த விஷயம்தான் தெலுங்கு, தமிழ் சினிமா உலகில் தீயாய் பரவி வருகிறது. இதெல்லாம் உண்மையா, பொய்யா என்பதை அறிய, வாரிசு நடிகையிடம் விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதைதவிர, எந்தெந்த நடிகைகளுடன் இவர்கள் ஜாலியாக இருந்தனர் என்ற லிஸ்ட்டும் எடுத்து வருகிறார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு டென்ஷன் தாங்கவில்லையாம். அதனால் முருகன், சுரேஷூடன் உல்லாசமாக இருந்த நடிகைகள், ஆளும் தரப்பை சேர்ந்தவர்கள், விஐபிக்களை தொடர்பு கொள்ள முயன்று வருகிறார்களாம்..

நடிகைகள் தரப்பில் இருந்து கூறி வருவது, எங்களிடம் நகை கடை வச்சிருக்கிறதா சொன்னாங்க. நகைகளை பரிசாக தந்ததுனாலே தான் வாங்கி கொண்டோம். மற்றபடி எந்த தொடர்பும் இல்லை. அதுமட்டுமில்லாமல் நாங்க இப்பதான் நிறைய படங்களில் கமிட் ஆகி இருக்கோம். இதனால் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் எங்கள் மானம், மரியாதையே போய்விடும். நீங்க தான் இதற்கு உதவி செய்யணும். என்று சில விஜபிக்களிடம் போன் போட்டு புலம்பி வருகிறார்களாம்.

ஆனால், இந்த கொள்ளையர்கள் தமிழ்நாடு என்று மட்டும் இல்லாமல், தேசிய கொள்ளையர்கள் ஆவர். இந்த நடிகைகளை காப்பாற்ற போய், நமக்கு ஏதாவது பிரச்சனை ஆகிவிடுமோ என்று விஐபிக்கள் தரப்பு உதவி செய்ய தயங்குகிறதாம். அதுவும் இல்லாமல் இந்த பஞ்சாப் நேஷனல், லலிதா ஜூவல்லரி கொள்ளைகள் வெளியே தெரிந்து விவகாரம் பெரிதாகி விட்டதால், நடிகைகளின் கெஞ்சல்களுக்கு நழுவி கொண்டு போகிறார்களாம் ஆளும் தரப்பும், விஐபிக்கள் தரப்பும்.

loading...