நைட் ஆனா என் மனைவிக்கு தப்பு தப்பா போன் வருது.. காவலருக்கு நேர்ந்த பரிதாபம்..!

Report
280Shares

சென்னை கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருபவர் கார்த்திக். இவர் சமீபகாலமாக தனது மனைவிக்கு தெரியாத எண்களிலிருந்து இரவு நேரத்தில் தப்பு தப்பாக போன் வருவதாக கூறி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் காவல்துறையினர் இவருடைய புகாரை கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

இதுமட்டுமல்லாது, மனைவியின் மீது வேறு நபரை காதலிப்பதாக சந்தேகப்படுவதாக கூறி கார்த்திக் மீதே வழக்குப்பதிவு செய்யப்போவதாக கூறி அவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த காவலர் கார்த்திக் தனக்கு நேர்ந்தவற்றை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

மேலும், காவல்துறை உயரதிகாரிகள் தான் அளித்த புகாரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்வதாகவும் கூறியுள்ளார்.

loading...