பெற்ற குழந்தையை கருணைகொலை செய்ய அனுமதி வேண்டும்.. நீதிமன்றத்தை நாடிய பெற்றோர்.!

Report
631Shares

ஆந்திராவில், பெற்ற மகளை கருணைகொலை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு சென்ற பெற்றோர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில், சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பவாஜன். இவரது மனைவி ஷப்னா.

இந்த தம்பதிக்கு அழகான குழந்தை பிறந்துள்ளது. குழந்தைப் பிறந்ததும் தம்பதியினர் மேலும் உற்சாகமடைந்து கண்ணும் கருத்துமாக குழந்தையைப் பார்த்து வந்தனர்.

இந்நிலையில், இவர்களின் குழந்தைக்கு ஹைப்போ க்ளைசிமியா எனும் ரத்தச் சர்க்கரை குறைபாடு நோய் தாக்கியுள்ளது.

தற்போது 1 வயதாகும் குழந்தை இந்த நோயினால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருக்கிறது. மிகவும் அரிய வகை நோய் என்பதால் மருத்துவச் செலவு மிக அதிகமாகிறது.

இந்நிலையில், தினக்கூலியான பவாஜன் இதுவரை குழந்தையின் மருத்துவ செலவுகளுக்காக வீட்டில் இருந்த நகைகள், சொத்துகளை எல்லாம் விற்று, ரூ12 லட்சம் வரை செலவுகள் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, இனிமேல் தொடரும் மருத்துவச் செலவுக்கு பணமில்லாமல் அவதிப்படுவதாகவும் எனவே, தங்களது மகளை கருணை முறையில் உயிரிழக்க செய்ய அனுமதிக்க கோரி பவாஜன் மற்றும் ஷப்னா தம்பதி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்திய நீதித்துறை வரலாற்றில் இவர்களது வழக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

loading...