காருக்குள் நிர்வாணமாக இருந்த காதல் ஜோடிகள்.... தீவிர விசாரணையில் பொலிசார்..!

Report
447Shares

காதல் ஜோடிகள் காருக்குள் நிர்வாணமாக இறந்து கிடந்த சம்பவம் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சேலம் பகுதியை சேர்ந்த வெள்ளி வியாபாரி கோபியின் மகன் சுரேஷ். கல்லூரியில் படித்து வரும் சுரேஷ் சம்பவ தினத்தன்று கல்லூரி முடிந்து வீடு திரும்பாததால் குடும்பத்தார் அவனை தேடியுள்ளனர். எங்கு தேடியும் மகன் கிடைக்காததால் பொலிசாரை நாடியுள்ளனர்.

இந்த புகாரை ஏற்ற பொலிசார், சுரேஷை தேடிய போது, கோபிக்கு சொந்தமான கார் ஷெட் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சுரேஷ் மற்றும் ஒரு இளம்பெண்ணின் சடலம் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது.

அந்த இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த வெள்ளி வியாபாரி ரவி என்பவருடைய மகள் ஜோதிகா என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் இரு குடும்பத்தாரிடமும் விசாரணை மேற்கொண்டதில், சுரேஷ் - ஜோதிகா காதலித்ததாகவும், ஆனால், குடும்பத்தினர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததும் தெரியவந்துள்ளது.

இதனால், இந்த காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டார்களா? அப்படி தற்கொலை செய்துக்கொண்டால் எதற்கு ஆடைகள் இல்லாமல் இருக்க வேண்டும். காருக்குள் உல்லாசமாக இருந்த போது மூச்சடைத்து உயிரிழந்துள்ளனரா? என்ற பல கோணத்தில் அடுத்தக்கட்ட விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

16574 total views