திருமணமாகி ஆசையாக வந்த புதுப்பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! அதன்பின் நடந்த சம்பவம்

Report
969Shares

தந்தையே கொன்றதால் பரபரப்பு தமிழகத்தில் திருமணமான 25 நாளில் பெற்ற மகனை அவரது தந்தையே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனியின் பூதிப்புரம் கோட்டைமேடு தெருவை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் மலைச்சாமி.

பெரம்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவருக்கும், ஜோதி என்ற பெண்ணுக்கும் கடந்த 25 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.

கணவருடன் வாழ ஆசையாக வந்த ஜோதிக்கு குடிபழக்கத்துக்கு அடிமையானவர் என்ற தெரிந்ததும் பேரதிர்ச்சியாக இருந்தது.

இதனால் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார், இதனால் மலைச்சாமியை அவரது தந்தை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று குடிப்பதற்கு பணம் கேட்டு தங்கராஜை தொந்தரவு செய்துள்ளார்.

ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த தங்கராஜ், மலைச்சாமியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார், இதில் ரத்த வெள்ளத்தில் மலைச்சாமி பரிதாபமாக பலியானார்.

இதனை தொடர்ந்து ஜோதி அளித்த புகாரின் பேரில் தங்கராஜை பொலிசார் கைது செய்தனர்.

36753 total views