வேலை முடிந்து இரவில் தனியாக சென்ற இளம்பெண்... ஆபாசமாக திட்டிய இளைஞர்: பின்னர் நிகழ்ந்த தரமான சம்பவம்..!

Report
306Shares

மும்பையில் மதுபோதையில் தன்னை ஆபாசமாக திட்டிய வாலிபரை இளம்பெண் விரட்டிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் விலே பார்லே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர், கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல வேலைமுடிந்து தன்னுடைய சக ஊழியருடன் காரில் சென்று ராஜேந்திர பிரசாத் நகரில் இறங்கியுள்ளார்.

அப்பகுதியிலிருந்து, விலே பார்லே செல்வதற்காக, இந்த இளம் பெண் காத்திருந்தபோதுதான் அங்கு வந்த தினேஷ் என்கிற இளைஞர், கடுமையான மது போதையில், இந்த இளம் பெண்ணை ஐட்டம் என்று ஆபாசமான வார்த்தையால் குறிப்பிட்டுக் கூறி திட்டியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைத்த குறித்த இளம்பெண் தினேஷ் செல்லும் வழியே பின் தொடர்ந்து , அவரது வீட்டைக் கண்டுபிடித்ததோடு அங்கிருந்து தனது கணவருக்கும் குடும்பத்தினருக்கும் போன் செய்து தகவல் கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர்கள் விரைந்துவந்து தினேஷை மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

loading...