நூடுல்ஸ் சாப்பிட்டுவிட்டு பெண் செய்த காரியம்... பரிதாபமாக உயிரிழந்த சோகம்!

Report
734Shares

சேலத்தில் பெண் ஒருவர் நூடுல்ஸ் சாப்பிட்டுவிட்டு மது அருந்திய போது திடீரென மயக்கமடைந்து மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்தர்(28) என்ற பெண் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு வேலை முடிந்து சென்ற எஸ்தர், தன்னுடன் வேலை செய்யும் சக ஊழியருடன் நூடுல்ஸ் சாப்பிட்டுவிட்டு மது அருந்தியுள்ளார்.

பின்பு சிறிது நேரத்தில் மயங்கிவிழுந்த எஸ்தரை யாரும் கவனிக்காமல் தூங்கச் சென்றுள்ளனர். இன்று காலை ரொம்ப வெகுநேரமாகியும் எஸ்தர் எழவில்லை. இதனால் அவரை வேலைக்கு செல்ல நண்பர்கள் எழுப்பி உள்ளனர்.

உடல அசைவற்று கிடப்பதை அவதானித்த சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளதையடுத்து, பொலிசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்தர் வேலை செய்த பியூட்டி பார்லரில் ஏராளமான வெளிநாட்டு மது பொருட்கள் இருந்துள்ளதை பறிமுதல் செய்துள்ளனர். மது அருந்தியதால் இறந்தாரா? அல்லது நூடில்ஸ்-ல் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டாரா என்று கோணத்தில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரேத பரிசோதனை செய்த பின்பு மரணத்திற்காக பல ரகசியம் வெளிவரும் என்று கூறப்படுகின்றது.

loading...