தூங்கி கொண்டிருந்த மனைவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபர்.. பின்பு கணவன் செய்த வெறிச்செயல்..!

Report
701Shares

தூங்கிகொண்டிருந்த மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபரை, கணவன் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபி அடுத்த அவ்வையார் பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார் ரிக்வண்டி லாரி டிரைவர் அதே ஊரை சேர்ந்தவர் மணிமோகன், நேற்று முன்தினம் இரவு மணிமோகனும் அவரது மனைவி செல்வியும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்து விஜயகுமார் மணிமோகனின் மனைவியை தட்டி எழுப்பி உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வி சத்தம் போட்டுள்ளார் உடனே சுதாரித்த விஜயகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிமோகனும் அவரது நண்பர்களும் விஜயகுமாரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மதியம் 2 மணியளவில் அவ்வையார் பாளையம் பக்கம் வந்துகொண்டிருந்தார் விஜயகுமார், இவரை பார்த்ததும் செல்வியின் கணவர் மணிமோகன் மற்றும் 3 பேரும் சேர்ந்து விஜயகுமாரை பிடிக்க விரட்டினர். இதை கண்டு அவரும் ஓட்டம் பிடித்தார். சின்னகுளம்பிரிவு மாரியம்மன் கோவில் அருகே விஜயகுமாரை மணிமோகன் உள்பட 4 பேரும் சேர்ந்து பிடித்து ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் நிலை குலைந்து ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தார். அதோடு விடாமல் அவர்கள் வாயில் வி‌ஷத்தை ஊற்றினர் விஜயகுமார் வந்த மோட்டார் சைக்கிளால் அவரது கழுத்தில் ஏற்றினர். இதில் சிறிது நேரத்தில் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பி

இதன் பின்னர் அவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். விஜயகுமார் இறந்து கிடந்த இடத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த விஜயகுமார் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொடூர கொலையில் தலைமறைவாக உள்ள மணி மோகன் மற்றும் சதிஸ்குமார் பூபதிராஜா, நாகராஜ்ஆகிய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

25495 total views