பல மணி நேரம் வித்தைக் காட்டிய ராட்சத பாம்பு... அலறியடித்து ஓடிய மக்கள்!

Report
364Shares

சென்னையில் கேபிளில் தொங்கியபடி பலமணி நேரம் வித்தைகாட்டிய ராட்சத பாம்பினால் பொதுமக்கள் அச்சத்துடன் அலறியடித்து தலைதெறிக்க ஓடியுள்ளனர்.

சென்னை மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயில் தெரு சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த தருணத்தில் நேற்று மாலை மின்கம்பத்துடன் இணைந்திருந்த கேபிளில் ஆறு அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தது.

இதைப்பார்க்க மக்கள் தங்கள் மீது பாம்பு விழுந்து விடுமோ என பயந்து அலறியடித்து ஓடியவண்ணம் இருந்தனர் பலர் வேடிக்கை பார்த்தனர் பலர் தங்களது போனில் படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட வண்ணம் இருந்துள்ளனர். பின்பு அங்கிருந்த கடைக்கார்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் வராத நிலையில் பாம்பு அரை மணிநேரத்திற்குள் எஸ்கேப் ஆகியுள்ளது. இந்த பாம்பு காட்டிய வித்தையால் சாலையில் அரை மணிநேரம் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

loading...