இரும்பு வாளியால் தாக்கிய டியூசன் டீச்சர்... தலையில் 8 தையல்களுடன் மாணவன்! செய்த தவறு தான் என்ன?

Report
292Shares

இந்திய மாநிலமான தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சக மாணவியின் நோட்டை மாணவன் ஒருவன் எடுத்ததால் ஆத்திரம் அடைந்த டியூசன் ஆசிரியர் மாணவனை தலையில் இரும்பு வாளியைக் கொண்டு தாக்கியுள்ளார்.

நாகர்கோவிலை அடுத்த பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்தவர் மாஹின் அபுபக்கர். பெயிண்டிங் வேலை செய்து வரும் இவருக்கு இரண்டு மகன்கள் இருந்து வருகின்றனர். மூத்த மகன் 8ம் வகுப்பும், இரண்டாவது மகன் பாரிஸ் முகம்மது 6ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இருவரும் அருகில் சரண்யா என்ற ஆசிரியரிடம் டியூசன் சென்று படித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று தம்பி பாரிஸ் தலையில் ரத்தத்துடன் அவருடைய அண்ணன் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளான்.

பெற்றோர்கள் விசாரித்ததில் டீச்சர் தலையில் இரும்பு வாளியைக் கொண்டு தாக்கியது தெரியவந்துள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற செிறுவனுக்கு 8 தையல்கள் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கு பதிவு செய்த பொலிசார் தாய், தந்தையுடன் தலைமறைவாகியுள்ள டீச்சரை தேடி வருகின்றனர்.

loading...