மாணவியை ஆபாசமாக திட்டிய ஆசிரியர்.. மாணவி எடுத்த விபரீத முடிவு..!

Report
135Shares

ராமேஸ்வரத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவியை ஆபாசமான வார்த்தைகளால் திட்டயதால் மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் அருகே உள்ள நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரி.

இவர் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், காளீஸ்வரி தனது சக மாணவிகளுடன் வங்கி கணக்கு ஓபன் செய்ய சென்றுவிட்டு காலதாமதமாக பள்ளிக்கு வந்ததாக தெரிகிறது.

இதனால், அறிவியல் ஆசிரியை ஜலீலா மாணவிகளை அவதூறாக பேசியுள்ளார். அறிவியல் ஆசிரியையுடன் இணைத்துக்கொண்டு ஆங்கில ஆசிரியர் ஜெரோன் என்பவரும் மாணவிகளை ஆபாசமாக பேசியுள்ளார்.

இதனால், மனமுடைந்த மாணவி காளீஸ்வரி எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

இதை அறிந்த பெற்றோர், உடனே மாணவியை பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்துள்னனர். அதன்பின்னர் உறவினர்களுடன் பள்ளியை முற்றுகையிட்டு கல்வி துறை அதிகாரிகளுடன் சேர்ந்து விசாரித்ததில் ஆசிரியர்கள் அவதூறாக பேசியது தெரியவந்தது.

சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் இருவரும் பணியிடம் மாற்றம் செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்துசென்றனர்.