குழந்தையின் கண்முன்னே தாயை அடித்து கொடுமைப்படுத்திய குடும்பம்.. வெளியான பகீர் சிசிடிவி காட்சி..!

Report
1110Shares

ஓய்வு பெற்ற நீதிபதி நூட்டி ராமமோகன ராவ், இரவில் தனது மகன் மற்றும் மனைவியுடன் சேர்ந்து மருமகளை அடித்து துன்புறுத்தும் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் ஓய்வு பெற்ற நீதிபதியான நூட்டி ராமமோகன ராவ், தன் மகன், மனைவியுடன் சேர்ந்து மருமகள் சிந்து சர்மாவை வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தும் சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அவர்கள் மூவரும் சேர்ந்து தாக்கியபோது, குழந்தை தாயை அடிப்பதை கண்டு காலை பிடித்து தடுக்கிறது. அதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து அந்த பெண் பொலிசாரிடம் வரதட்சணைக் கேட்டு துன்புறுத்துவதாக புகார் அளித்துள்ளார். அதன் பின் தர்ணா போராட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளார். இதுகுறித்து பொலிசார் அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்..

36199 total views