நடிகை சமந்தா பண்ணைவீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது இவர் தானாம்..!

Report
1902Shares

நடிகை சமந்தா வீட்டில் அழுகிய நிலையில் நேற்று முன்தினம் சடலம் கண்டெடுக்கப்பட்டது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் தற்போது இறந்து கிடந்தது யார் என்று பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகர்ஜுனாவின் மகன் நாக சைதான்யாவை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவில் செட்டில் ஆகியுள்ளார்.

இந்நிலையில், மகபூப்நகர் மாவட்டத்தில் இவருக்கு என்று சொந்தமாக 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணை வீடு ஒன்று உள்ளது. பண்ணையில் அருகில் உள்ள பல ஆட்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் குறித்த பண்ணை வீட்டில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

உடனடியாக இது யாருடைய சடலம்? இவர் எங்கே இருந்து இறந்ததற்கு காரணம் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது இறந்து கிடந்தது யார் என்று பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது, பாப்பிரெட்டிகுடா பகுதியைச் சேர்ந்த சக்காளி குண்டு(30) என்பவர் என்றும், இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி சில ஆண்டுகள் ஆகி விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி விட்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் என அவரது பெற்றோர்கள் விசாரணையில் கூறியுள்ளனர்.

இருப்பினும் போலீசார் விசாரணையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

57713 total views