சமூக வலைதளங்களுக்கு அடிமையாக இருந்த மனைவி.. கணவர் செய்த கொடூர செயல்..!

Report
520Shares

பெங்களூருவில் சமூக வலைதள பக்கத்திற்கு அடிமையாகிய மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு கங்கொண்டனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி சுஷ்மா.

இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், சுஷ்மாவின் தாய் தனது மகள் மற்றும் பேரனை காண வந்துள்ளார். அப்பொழுது சுஷ்மாவும், அவரது குழந்தையும் வீட்டில் வீட்டில் இல்லை. நீண்ட நேரமாகியும் அவர்கள் வரவில்லை. இதனால் பதற்றமடைந்த சுஷ்மாவின் தாய், உடனே அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரைப்பெற்ற பொலிசார், முதலில் சுஷ்மாவின் கணவரான ராஜுடம் விசாரணை மே‌ற்கொ‌ண்டனர். அப்போது தான் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியானது.

அதாவது தனது மனைவி கொஞ்ச நாட்களாகவே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றிக்கு அடிமையாகி வீட்டு வேளைகளை செய்யாமல் இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜு தனது மனைவி மற்றும் குழந்தையை கும்பல்கொடு என்ற காட்டிற்கு அழைத்து சென்று இருவரையும் கல்லால் அடித்து கொலை செய்து விட்டு பின் எரித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

loading...