பள்ளியிலிருந்து அழைத்து வந்த மகள்களை ஆற்றில் வீசிச் சென்ற தந்தை... பின்னணி காரணம் என்ன?

Report
208Shares

இந்திய மாநிலமான தமிழகத்தில் கும்பகோணத்தில் அரசு பள்ளியில் படித்து வந்த சிறுமி ஒருவரை அவரது தந்தை ஆற்றில் தூக்கிப் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் லாவண்யா மற்றும் ஸ்ரீமதி இரண்டு பெண் பிள்ளைகள் படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்த இருவரையும் அவரது தந்தை பள்ளியிலிருந்து அழைத்து வந்த தருணத்தில், குடிபோதையில் இருந்த இவர் இரண்டு சிறுமிகளையும் மனசாட்டியில்லாமல் அருகில் இருந்த ஆற்றில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஒடியுள்ளார்.

ஆற்றில் சிறுமிகள் தத்தளித்து கூச்சலிட்டதை அவதானித்த பொதுமக்கள் அவரை பத்திரமாக மீட்டு பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். அப்பொழுது, பொலிசாரிடம் சிறுமி அளித்த வாக்குமூலம் என்னவென்றால், தன்னையும் தனது தங்கை ஸ்ரீ மதியையும் எனது தந்தை கோபத்தில் ஆற்றில் தூக்கி வீசிவிட்டார் என்று கூறியுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

loading...