3 இளம்பெண்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று ஆடைகளை களைத்த கொடூரம்..! அதிர வைக்கும் காரணம்

Report
288Shares

அசாம் மாநிலத்தில் வேறு சமதாயத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததால் இளைஞரின் சகோதரிகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நிர்வாணமாக்கிய கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர்களின் காதலுக்கு இருவிட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதல்ஜோடி வீட்டைவிட்டு ஓடிச்சென்று திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், பெண்ணின் பெற்றோர்கள் தங்களது மகளை குறித்த இளைஞர் கடத்திவிட்டதாக கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் கடந்த 9ஆம் தேதி விசாரணைக்காக இளைஞரின் வீட்டில் இருந்தால் 3 சகோதரிகள் மற்றும் மூத்த பெண்ணின் கணவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இளைஞரின் சகோதரிகளை விசாரணை செய்யும் போது, அவர்களின் ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்தபோது அதற்கு காவல்துறையினர் 4 பேரின் உடைகளை கலைந்து லத்தியால் கடுமையாக தாக்கியதாகவும் பின்னர் பூட்ஸ் காலால் மிதித்து உதைத்தாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால், மூத்த சகோதரி கர்ப்பம் கலைந்துவிட்டதாக விட்டதாக கூறி கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் ஒரு பெண் காவலர் உள்பட 2 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் மூவரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.