இரண்டு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய நபர்.. மூன்றாவதாக பெண் தேடியபோது அடித்து துவைத்த மனைவிகள்.. பரபரப்பு சம்பவம்.!

Report
201Shares

ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தவிருந்த நபரை இரண்டு மணவிகளும் அடித்து, உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் அரவிந்த தினேஷ்(26). இவர் ராசிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2016-ம் ஆண்டு, பிரியதர்ஷினி என்பவருடன் கல்யாணம் நடந்தது. ஆனால், 15 நாளிலேயே பிரியதர்ஷினியை தினேஷ் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி உள்ளார்.

கொடுமை தாங்க முடியாமல், பிரியதர்ஷினி மாமியார் வீட்டில் இதை பற்றி சொல்லியும், அவர்கள் எதுவும் தட்டிகேட்கவில்லை. இதனால் காவல் நிலையத்தில், புகார் செய்த பிரியதர்ஷினி, திருப்பூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கே போய்விட்டார்.

பிரியதர்ஷினி பிரிந்து போனதும், தினேஷூக்கு வசதியாக போய்விட்டது. அதனால் மேட்ரிமோனியலில் தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்று சொல்லி இன்னொரு பெண்ணை தேடினார். கரூர் பகுதியை சேர்ந்த அனுப்பிரியா என்ற 23 வயது பெண்ணை கடந்த ஏப்ரல் 10-ம் தேதி கல்யாணம் செய்து கொண்டார்.

ஒண்டிப்புதூரில் ஒரு வீட்டினை வாடகைக்கும் எடுத்து வசித்து வந்தார். ஒருசில மாதங்கள்தான் கடந்ததும். அதற்குள் அனுப்பிரியாவையும் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தினார் தினேஷ். அவரும் கொடுமை தாங்கமுடியாமல், அனுப்பிரியா கரூரில் உள்ள அம்மா வீட்டிற்கே சென்றுவிட்டார்.

இதனால் அவரும் சென்றதால், அடுத்த பெண்ணை தேட தயாராகியுள்ளார் தினேஷ். அதனால் 3-வதாக கல்யாணம் செய்ய திரும்பவும் மேட்ரிமோனியலில் பெண் தேடினார். இந்த விஷயம் 2 மனைவிகளுக்கும் தெரிந்துள்ளது. இதை பற்றி அவர்கள் கேட்டதற்கு, அப்படித்தான் செய்வேன் என்று தினேஷ் திமிராக பேசியுள்ளதாக தெரிகிறது.

இதனால், பிரியதர்ஷினி, அனுப்பிரியா இருவரும், நேரடியாக தினேஷ் வேலை பார்க்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் தினேஷை காண அங்கு அனுமதி தர மறுத்துள்ளனர். இதனால் இரு பெண்களும் பேக்டரி வாசலிலேயே தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, தகவலறிந்து சென்ற போலீசார், 2 மனைவிகள், தினேஷை ஸ்டேஷனுக்கு வரும்படி அழைத்துள்ளார்கள். இதனால் ஸ்டேஷனுக்கு செல்வதற்காக தினேஷ், பேக்டரியை விட்டு வெளியே வந்தார். அப்போது ஆவேசத்தில் இருந்த 2 மனைவிகளும், தினேஷ் மீது சரமாரி தாக்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மனைவிகளிடம் இருந்து உடனே தினேஷை போலீசார் மீட்டு சென்றனர். தங்களை ஏமாற்றிய தினேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனைவிகள் புகார் தந்ததையடுத்து, விசாரணை நடந்து வருகிறது. 2 மனைவிகளும், 3-வது மனைவிக்கு அடிபோட்ட கணவனை துவைத்து எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

loading...