ஆடை மாற்றுவதை எட்டிப்பார்த்த கணவரின் நண்பன்: மனைவிக்கு நடந்த கொடூரம்

Report
445Shares

தமிழகத்தில் கணவரின் நண்பர் மீது பாலியல் புகாரளித்த மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெருங்குடியில் வசித்து வரும் தம்பதி குமார்- மணிமேகலை, காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு ஆறு வயதில் மகன் இருக்கிறார்.

மதுவுக்கு அடிமையான குமார், தினமும் குடித்து விட்டு வருவது வழக்கமாம், சில நேரங்களில் நண்பர்களையும் வீட்டுக்கு அழைத்து வந்து குடித்துள்ளார்.

இதை பார்த்த மணிமேகலை கோபத்தில் குமாரை திட்டியதுடன், அவரது நண்பர்களையும் திட்டியுள்ளார்.

பின்னர் வீட்டிற்குள் சென்று ஆடையை மாற்றியுள்ளார், இதை குமாரின் நண்பரான மாணிக்கவேல் எட்டிப் பார்த்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த மணிமேகலை குமாரிடம் சென்று கூற, மனைவியை நம்பாமல் திட்டியுள்ளார்.

இதனால் கோபத்தில் இருந்த மணிமேகலை அருகிலிருந்த பொலிஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இதுபற்றி தெரிந்ததும், எனக்கு நண்பர்கள் தான் முக்கியம், எனவே புகாரை வாபஸ் வாங்கு என குமார் திட்டியுள்ளார்.

முடியாது என மணிமேகலை கூறியதும் இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, கத்தியால் மணிமேகலையை குத்தியுள்ளார்.

அலறித்துடித்த மணிமேகலையை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார்.

இதையடுத்து தலைமறைவான குமார் மற்றும் அவரது நண்பர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

18254 total views