பட்டுப்புடவையில் தமிழ் பெண்ணாக ஜொலித்த வெளிநாட்டு பெண்... கடல்விட்டுத் தாண்டி வந்த காதல்

Report
385Shares

ஜப்பானைச் சேர்ந்த பெண் தமிழக இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் கும்பகோணம் மோதிலால் தெருவை சேர்ந்த வசந்தன். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் ஆராய்ச்சி படிப்புக்காக சென்றுள்ளார். அதன் பின்பு படிப்பை முடித்து, அங்கே வேலை செய்து வந்துள்ளார்.

இத்தருணத்தில் முகநூல் வழியாக ஜப்பானைச் சேர்ந்த வழக்கறிஞர் மேகுமி என்ற இளம்பெண் அறிமுகமாகி நண்பர்களாக பேசி வந்துள்ளனர். பின்பு இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.

இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்த இவர்களது குடும்பத்தினர், இன்று கும்பகோணத்தில் வைத்து தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணத்தினை நடத்தி வைத்துள்ளனர்.

மணப்பெண்ணின் பெற்றோர்கள் வரஇயலாத காரணத்தினால் அவரது சார்பில் மணப்பெண்ணின் தாய்மாமன் முன்நின்று இந்த திருமணத்தினை நடத்தி வைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி திருமணத்திற்கு வந்திருந்த மணமகளின் தங்கை, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தமிழ் கலாச்சாரப்படி வேட்டி, புடவை அணிந்து திருமணத்துக்கு வந்தவர்களை வாழ்த்தி வரவேற்றது மண்டபத்தில் இருந்த பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

loading...