திருடிய தங்கச்சங்கிலியை விழுங்கிய திருடன்... கடைசியில் நிகழ்ந்த கூத்து என்ன தெரியுமா?

Report
368Shares

ராஜஸ்தான் மாநிலத்தில் திருடன் ஒருவன் பெண்ணின் பறித்த தங்கச்சங்கிலியை விழுங்கிவிட்டதை வெளியில் எடுப்பதற்கு பொலிசார் கையாண்ட யுக்தி சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் கங்காசாகர் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை ஷாப்பிங் வந்த பெண்ணின் தங்கச்சங்கிலி ஒன்றினை திருடன் பறித்துச் சென்றுள்ளான்.

இதுகுறித்து அப்பெண் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து, பொலிஸார் அங்கிருந்த சிசிடிவி கமெரா காட்சியினை வைத்து திருடர்களை 1 மணிநேரத்தில் பிடித்துள்ளனர். ஆனால் இருவரில் ஒருவன் தன் குற்றத்தை மறைக்கும் பொருட்டு தங்க சங்கிலியை விழுங்கிவிட்டார்.

பின்னர் காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் குடலில் இருந்து சங்கிலியை எடுக்க எண்டோஸ்கோபி செய்ய வேண்டும் அல்லது மலம் கழிக்க செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதில் இரண்டாவது பிளானை செயல்படுத்த மருத்துவர்கள் முயன்றனர். இதற்காக 2 டஜன் வாழைப்பழம் கொடுத்தனர், அதன் பின்னர் மலத்துடன் சங்கிலியும் வெளியேறியது. இதனால் இந்த சோதனை பொலிஸாருக்கு வெற்றியை கொடுத்துள்ளது.

12139 total views