திருமணத்திற்கு இன்னும் 8 நாள்... மகிழ்ச்சியில் இருந்த பெண் செல்போனால் பரிதாப மரணம்!

Report
866Shares

திருமணத்திற்கு இன்னும் 8 நாட்கள் இருக்கும் நிலையில் இளம்பெண் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டே ரயில்வே கேட்டை கடக்க முயன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திண்டிவனம் அருகே சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி. ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு செப்டம்பர் 1ம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமண வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில் வழக்கம்போல் இன்று வேலைக்கு சென்றுள்ளார் ஜான்சி ராணி. இவர் கம்பெணிக்கு செல்லும் வழியில் ரயில்வே கேட் ஒன்றினை கடந்து செல்ல வேண்டியுள்ளது. ஜான்சி ராணி செல்போன் பேசிக்கொண்டே அந்த கேட்டினை கடக்க முயன்ற பொழுது, திருச்செந்தூரிலிருந்து சென்னை வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதியதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

திருமணத்திற்கு இன்னும் 8 நாள் உள்ள நிலையில் மகள் பரிதாபமாக உயிரிழந்தது பெற்றோர்கள் கதறி துடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு இருப்புப் பாதை பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

29061 total views