பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் தனியாக நின்று கொண்டிருந்த சிறுமி.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!

Report
291Shares

பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியை விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.

திருப்பூர் பகுதியைச் சேர்ந்த, 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் வெகு நேரமாக காத்துகொண்டிருந்தார். நள்ளிரவு வரை தனியாக காத்திருந்ததால் அந்த சிறுமியை அங்குள்ள நபர்கள் ஆபாச சைகைகளை கட்டி துன்புறுத்தியுள்ளனர்.

இதை பார்த்த நபர் ஒருவர் அந்த சிறுமியை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். காவல்துறையினர் அந்த சிறுமியை விசாரித்த போது சில திடுக்கிடும் தகவல் காத்திருந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமி மதுரைக்கு ரயிலில் பயணம் செய்தபோது, திண்டுக்கல்லைச் சேர்ந்த இளைஞரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர அந்த சிறுமியை கண்டித்துள்ளனர்.

ஆனால் அந்த சிறுமிக்கு அந்த இளைஞரை விட்டு பிரியமுடியவில்லை. இதனால் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அந்த இளைஞரை கேட்டுள்ளார்.

அதற்கு அந்த இளைஞர் அந்த சிறுமியை திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வரசொல்லியுள்ளார். உடனே சிறுமியும் திண்டுக்கலுக்கு கிளம்பி வர, அந்த சிறுமியை பேருந்து நிறுத்ததிலேயே இருக்க சொல்லிவிட்டு தனது பெற்றோரிடம் சம்மதம் வாங்கி வருவதாக கூறி அந்த இளைஞர் சென்றுள்ளார்.

இந்நிலையில் வெகு நேரம் ஆகியும் அந்த நபர் வரவில்லை.. இதனை கேட்ட பொலிசார் அதிர்ச்சியாகி, அந்த இளைஞரின் செல்போன் எண்ணை வைத்து அவரை கண்டுபிடிக்க பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

12234 total views