என்னை மன்னித்துவிடுங்கள் மாமா... ஒரு வயது குழந்தையுடன் மனைவி செய்த விபரீத செயல்..!

Report
277Shares

கோவையில் கணவர் திட்டியதால் குழந்தையுடன் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக இருப்பவர் ஈஸ்வரசாமி. இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மாலதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு சசிகுமார் மஹாஸ்ரீ என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சேர்த்து சிறுசேமிப்பு சீட்டு பிடித்து மாலதி வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, நேற்று வேலை காரணமாக ஈஸ்வரசாமி பழனிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், தனது மகன் சசிகுமாரை பள்ளிக்கு அனுப்பிய மாலதி வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். இந்நிலையில் மாலை 3 மணிஅளவில் தண்ணீர் வருவது குறித்து சொல்வதற்காக பக்கத்துக்குவீட்டு பெண் மாலதி வீட்டிற்கு சென்றுள்ளார்.

உள்ளே சென்று பார்த்தபோது மாலதி மற்றும் அவரது ஒரு வயது குழந்தை மகா ஸ்ரீ தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு சடலமாக கிடந்ததைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்து அலறியபடி வெளியே வந்துள்ளார்.

இது குறித்து காவல்தூறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் மாலதி மற்றும் அவரது குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், ஈஸ்வரசாமி சாப்பாடு செய்யாததால் மாலதியிடம் சண்டையிட்டதாகவும், பின்னர், தனது தாயிக்கு போன் செய்து அவள் சாப்பாடு செய்யவில்லை என குறை கூறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனால், ஈஸ்வரசாமியின் தாயும் மாலதியை போன் செய்து கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாலதி திக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது.

மேலும், தற்கொலை செய்துகொண்ட மாலதி, கடிதம் என்றையும் எழுதி வைத்துள்ளார்.

அதில் என்னால் யாரும் கஷ்டப்படக் கூடாது. சீட்டு பணம் வீட்டில் உள்ளது. அனைவருக்கும் கொடுத்து விடுங்கள், என்னை மன்னித்துவிடுங்கள் மாமா என்று எழுதி இருந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8959 total views