தேர்வு அறையில் வைத்து மாணவியிடம் பேராசிரியர் செய்த செயல்..! பின்னர் நடந்த சம்பவம்..!

Report
132Shares

தெலுங்கானாவில் பரிட்சைக்கு வந்த மாணவியிடம் பேராசிரியர் தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறி மாணவர்கள் பேராசிரியரை சரமாரியாக அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானாவில் கரீம் நகர் மாவட்டம் திம்மாப்பூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அந்த கல்லூரியில் துணைத் தேர்வு நடைபெற்றன. இந்த தேர்வு எழுதுவதற்காக வேறு ஒரு தனியார் பொறியியல் கல்லூரியிலிருந்து பொறியியல் மாணவி வந்துள்ளார்.

அப்போது, குறித்த கல்லூரியில் ஆய்வகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரியும் வெங்கடேஷ் என்பவர், தேர்வெழுதிக் கொண்டிருந்த குறித்த மாணவியிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒருகட்டத்தில் சகித்துகொள்ள முடியாத அந்த மாணவி உடனடியாக தேர்வு அறையிலிருந்து எழுந்து வெளியே வந்து சக மாணவிகளிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

இதனால், கோபமடைந்த உதவி பேராசிரியர் வெங்கடேஷ் குறித்த இளம்பெண்ணிடம் கடுமையாக பேசியதுடன், அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார்.

இதை கவனித்த, மாணவர்கள் திரண்டு வெங்கடேஷை விரட்டிப் பிடித்தனர். பின்னர் சரமாரியாக அவரைத் தாக்கினர்.

உதவிப் பேராசிரியர் வெங்கடேஷ்க்கு எதிராக கல்லூரி நிர்வாகத்திடமும், காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

புகாரைத் தொடர்ந்து கரீம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

6086 total views