கொடிகட்டி பறந்த Parle G நிறுவனத்தின் பரிதாப நிலை!...

Report
235Shares

பிரபல பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே ஜி நிறுவன நஷ்டத்தின் காரணமாக 10 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

பார்லே ஜி நிறுவனத்தில் கிட்டதட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றர்கள். இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் மட்டும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம்.

80 ஆண்டுகளாக கோலோச்சிய நிறுவனம்

உலகின் மிகப்பெரிய பிஸ்கெட் பிராண்டாக கருதப்படும் பார்லே ஜி, 1929 ல் மும்பையில் வைலே பார்லேவாக துவக்கப்பட்டது. 1939 ல் பிஸ்கெட் தயாரிப்பு துவங்கியது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, முதல் விளம்பரத்தில் ஆங்கில பிஸ்கெட்களுக்கு போட்டியாக இந்திய குளுகோஸ் பிஸ்கெட் பிராண்டாக அடையாளம் காணப்பட்டது. 2013 ல் ரூ.5,000 கோடியை கடந்த முதல் இந்திய நுகர்வோர் பிராண்டானது.

இந்நிலையில் பிஸ்கட் மீதான வரிவிதிப்பு 5 முதல் 12 சதவீதம் வரை இருந்ததை தற்போது 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் விற்பனை சரிந்தது.

15 சதவீத வரி விதிப்பின் காரணமாக விற்பனை மந்தமாக இருப்பதை சுட்டிக்காட்டி 12 விழுக்காடு அளவிற்கு வரி விதிப்பு இருக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தது நிறுவனம்.

இந்த கோரிக்கையை ஏற்றால் நன்றாக இருக்கும் என்றும் இல்லை எனில், நிறுவனத்திலிருந்து குறைந்தது 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க வேண்டி வரும் என அந்நிறுவன தலைவர் மைதீன் ஷா தெரிவித்துள்ளார்.

8065 total views